Wednesday, March 24, 2010

கணனியை எப்போதும் மேம்படுத்திய நிலையில் வைத்திருக்க உதவும் குறிப்புக்கள் !!

கணிணியை எப்போதும் மேம்படுத்திய நிலையில் வைத்திருக்க உதவும் குறிப்புகள் :


கணனியின் இயங்கு தளம் டிவைஸ் டிரைவர்ஸ் மற்றும் மென்பொருட்களை எப்போதும் மேன்படுத்திய நிலையில் வைத்திருப்பது முக்கியமாகும். ஹக்கெர்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கவும் இது உதவும். ஆனால் எங்கிருந்து ஆரம்பிப்பது எதைச் செய்வது என்று விழிப்பவர்களுக்கான சில டிப்ஸ்கள்.



1. அப்டேட் ஐ ஆரம்பிக்க முதல் ஒருமுறை கணனியை சுத்தப்படுத்தல் நல்லது அப்டேட் இன் பின்னர் வேகப்படுத்த இது உதவும். தேவையற்ற மென்பொருட்களை முறையாக நீக்கிவிடுதல் இணைய உலாவிகளின் ஹிஸ்டரி ஐ நீக்கிவிடுதல் ஒருமுறை டிச்க் கிளீனப் செய்தல் போன்றவை.


2. விண்டோஸ் தானியங்கி மேன்படுத்தல் மென்பொருளை (விண்டோஸ் அப்டேட்) எப்போதும் இயங்கு நிலையில் வைத்திருப்பது முக்கியம். இதை சரிபார்க்க Start - Control panel - Automatic update எனும் ஒழுங்கில் சென்று கிளிக் செய்ததும் திறக்கும் விண்டோவில் Automatic என்பது தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். (விண்டோஸ் பதிவு செய்யப்படாத பாதிப்பை ஹக்கிங் செய்து நிறுவி இருப்பவர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது)


3. கணனியிலுள்ள ஏனைய மென்பொருட்கள் மேன்படுத்த FileHippo வின் அப்டேட் செக்கர் எனும் இலவச மென்பொருளை பயன்படுத்தலாம். இந்த மென்பொருள் உங்கள் சிஸ்டத்தை தானாக நிறுவப்பட்டுள்ள அனைத்து மென்பொருட்களையும் ஸ்கானிங் செய்து அவற்றின் புதிய பதிப்பின் தகவல்களை தரும்.



4.மேன்படுத்த விரும்பாத மென்பொருட்களை தவிர்க்க ஆப்ஸனும் உண்டு. படத்தில் உள்ளது போன்று மேன்படுத்த வேண்டிவற்றின் விபரங்கள் காட்டப்படும். தேவையானதை தேர்வு செய்து அப்டேட் ஐ நிறுவிக்கொள்ளலாம்.


நன்றி :lankasritech

0 comments:

Post a Comment