Tuesday, March 30, 2010

தேவையற்ற வலைப்பக்கங்களை Block செய்ய

தேவையற்ற வலைப்பக்கங்களை Block செய்ய

கணினி பயனாளர்கள் பலரது கணினிகள், அவர்கள் மட்டுமின்றி, அவர்களை சார்ந்தவர்களாலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக வீட்டில் உபயோகிக்கும் கணினி, மற்றும் அலுவலகங்கள், கல்வி கூடங்கள் போன்றவற்றில் இணைய இணைப்பு இருப்பின், அவை தவறான உபயோகத்திற்கு பயன்படுத்தப் படுவது நாம் அறிந்தாலும் அதை தடுக்க இயலாமல் உள்ளது.

உதாரணமாக வீட்டில் சிறுவர்கள் / மாணவர்கள் எந்நேரமும் ஆர்குட், யூடியுப் ஃ பேஸ்புக் என படிப்பில் கவனம் செலுத்தாமல் மூழ்கி கிடப்பது. இது போன்ற தளங்கள் மற்றும் வலைப்பக்கங்களை நமது கணினியில் Block செய்ய வேண்டுமெனில், அதற்கான மென்பொருட்கள் (காசு கொடுத்து வாங்கோணும்) சந்தையில் நிறைய உள்ளன. ஆனால் எந்த ஒரு மென்பொருளையும் உபயோகிக்காமல் இது போன்ற தளங்களை விண்டோஸ் XP யில் Block செய்வது எப்படி என பார்க்கலாம்.

My Computer ல் விண்டோஸ் XP இயங்குதளம் உள்ள ட்ரைவிற்கு சென்று அங்கு
\Windows\System32\Drivers\etc என்ற கோப்புறைக்குள் சென்று அங்குள்ள hosts என்ற கோப்பை Notepad ல் திறந்து கொள்ளுங்கள்.
அந்த கோப்பின் கடைசி வரிக்கு சென்று அங்குள்ள 127.0.0.1 localhost என்ற வரிக்கு அடுத்த வரியில் 127.0.0.2 www.youtube.com எனவும், மற்றொரு தளத்தை Block செய்ய 127.0.0.3 www.sitename.com (உங்களுக்கு வேண்டியபடி) டைப் செய்து host கோப்பை சேமித்து. மூடி விடவும்.

கணினியை ஒருமுறை ரீஸ்டார்ட் செய்து விட்டால் போதும். இனி அந்த குறிப்பிட்ட தளங்கள் உங்கள் கணினியில் திறக்காது.


நன்றி : சுரேஸ் & http://suryakannan.blogspot.com/2010/03/block.html

Saturday, March 27, 2010

பயர்பாக்ஸ் ஆட்-ஆன் தொகுப்புகள் & டிப்ஸ்

பயர்பாக்ஸ் ஆட்-ஆன் தொகுப்புகள் & டிப்ஸ்






பய்ர்பாக்ஸின் ஆட்-ஆன் தொகுப்புகளின் உள்ள நன்மைகளின் பத்தின ஃப்டிப் வடிவில் கொடுத்துள்ளேன் , அப்புறம் நெருப்பு நரியில் எளிய வழிமுறைகளை பற்றியும் தந்துள்ளேன்


பார்க்க & படிக்க




தரவிறக்கம் செய்ய பயர்பாக்ஸ் ஆட்-ஆன் தொகுப்புகள் & டிப்ஸ், இங்கு கிளிக்கவும்

நெருப்பு நரியின் புதிய புதிய வசதிகள்

நெருப்பு நரியின் புது புது வசதிகள் :



பய்ர்பாக்ஸ் நிறுவனத்தினர் புதிய புதிய வசதிகளை அள்ளி அள்ளி வழங்கிய வண்ணம் இருக்கின்றனர் , அவர்களின் சமீபத்திய அப்டேட் இங்கே ஃப்டிஃப் வடிவத்தில் தந்திருக்கிறேன்


அதனை தரவிறக்கம் செய்ய நெருப்பு நெரி கிளிக்கவும்





நன்றி : இணையம்

Wednesday, March 24, 2010

கணனியை எப்போதும் மேம்படுத்திய நிலையில் வைத்திருக்க உதவும் குறிப்புக்கள் !!

கணிணியை எப்போதும் மேம்படுத்திய நிலையில் வைத்திருக்க உதவும் குறிப்புகள் :


கணனியின் இயங்கு தளம் டிவைஸ் டிரைவர்ஸ் மற்றும் மென்பொருட்களை எப்போதும் மேன்படுத்திய நிலையில் வைத்திருப்பது முக்கியமாகும். ஹக்கெர்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கவும் இது உதவும். ஆனால் எங்கிருந்து ஆரம்பிப்பது எதைச் செய்வது என்று விழிப்பவர்களுக்கான சில டிப்ஸ்கள்.



1. அப்டேட் ஐ ஆரம்பிக்க முதல் ஒருமுறை கணனியை சுத்தப்படுத்தல் நல்லது அப்டேட் இன் பின்னர் வேகப்படுத்த இது உதவும். தேவையற்ற மென்பொருட்களை முறையாக நீக்கிவிடுதல் இணைய உலாவிகளின் ஹிஸ்டரி ஐ நீக்கிவிடுதல் ஒருமுறை டிச்க் கிளீனப் செய்தல் போன்றவை.


2. விண்டோஸ் தானியங்கி மேன்படுத்தல் மென்பொருளை (விண்டோஸ் அப்டேட்) எப்போதும் இயங்கு நிலையில் வைத்திருப்பது முக்கியம். இதை சரிபார்க்க Start - Control panel - Automatic update எனும் ஒழுங்கில் சென்று கிளிக் செய்ததும் திறக்கும் விண்டோவில் Automatic என்பது தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். (விண்டோஸ் பதிவு செய்யப்படாத பாதிப்பை ஹக்கிங் செய்து நிறுவி இருப்பவர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது)


3. கணனியிலுள்ள ஏனைய மென்பொருட்கள் மேன்படுத்த FileHippo வின் அப்டேட் செக்கர் எனும் இலவச மென்பொருளை பயன்படுத்தலாம். இந்த மென்பொருள் உங்கள் சிஸ்டத்தை தானாக நிறுவப்பட்டுள்ள அனைத்து மென்பொருட்களையும் ஸ்கானிங் செய்து அவற்றின் புதிய பதிப்பின் தகவல்களை தரும்.



4.மேன்படுத்த விரும்பாத மென்பொருட்களை தவிர்க்க ஆப்ஸனும் உண்டு. படத்தில் உள்ளது போன்று மேன்படுத்த வேண்டிவற்றின் விபரங்கள் காட்டப்படும். தேவையானதை தேர்வு செய்து அப்டேட் ஐ நிறுவிக்கொள்ளலாம்.


நன்றி :lankasritech